வெள்ளி, 12 அக்டோபர், 2012

ஆசைகைளை துறந்து


அன்று
கண்ணீர் திர்நததால் கண்கள்
இரத்தம் தர துடிகின்றதா ?
அன்பினை தொலைத்து விட்டு
நெஞ்சம் கோபத்தை கொப்பளிக்கும்
நித்திரையில் தொலைத்து விட்ட
நினைவுகளை தேடுகின்றேன்
இன்று
ஆசைகைளை துறந்து விட்டு
ஆண்டி என்றே மாறிவிட்டேன்..                       smdsafa.net

1 கருத்து:

  1. அதிகாலைப்பொழுது


    பகலவன் பட்டொளி
    பொன்னிற பந்தாய் குளந்தனில்
    பசுமை புல்நுனியில்
    ஆயுள் கால நீடிப்பாய்
    அச்சமோடு விற்றிருக்கும் பனி .
    ஆழ்ந்து உறங்கும் புட்கள்
    ஆரவாரமாய் கண்விழிப்பு .
    இதழ் விரி மலரை
    இன்பத்துடன் நாடும் வண்டு .
    தூக்கத்திற்கு துக்கமாய்
    ஆதிகாலை செவிபாயும்
    ஆலயமணி .
    இடைவளைந்து இல்ல முற்றத்தில்
    கோலமிடும் மங்கை
    இன்பச்சிரிப்போடு
    முதுகில் பாரமேந்தி
    பயிலகம் செல்லும் குழந்தை .
    இருளில் மின்னிய
    தெரு ஓரவிளக்குகள்
    அணைக்க ஆளின்றி
    மங்கிய நிலையில் .
    உணவளிக்கும் உயரிய பணிக்காய்
    உடலாடையின்றி
    ஏர்கலப்பை ஏந்தி
    வீரநடை பயிலும்
    உழவன் .
    குடிசை மீதேறி
    பெட்டைக்கு குரலெழுப்பும்
    சேவல் .
    அலுவலகப் பணியால்
    அயர்ந்துறங்கும் தந்தையை
    தட்டியெலுப்பும் குழவி .
    இப்பகல் இன்பப்பகலாய்
    புலரதென
    பொத்திய போர்வையை விலக்கி
    வீதியை விழித்துப்பார்க்கும்
    வீதிப் பிச்சைக்காரன் .



    இளையகவி

    பதிலளிநீக்கு