ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

உங்கள் வரவிற்காய்


பாலை வனமாய் இருந்த
என் வாழ்வை
சோலை வனமாக்க
மழை பெய்தது போல்
விழுந்த மழைத்துளிகள்
என் நண்பர்கள் நண்பிகள்
என்றும் இந்த சோலை
உங்கள் வரவிற்காய்
எதிர் பார்த்து காத்திருக்கும்..

1 கருத்து:

  1. விடுதலை எங்கே ....................?




    தடையற்று வானிலே மிதக்கின்ற மேகத்தை
    தடுப்பார் யாருமில்லை
    கார்மேகத்தை கரத்தால்
    கலைப்போர் உண்டோ ?
    வானவில்லை வளைத்து
    அம்பு நாண் தொடுப்போர் உண்டோ ?
    வானச் சேலையை மடித்து
    மானத்தை மறைத்த
    மங்கைகள் உண்டோ ?
    காட்டிலே விரிந்த
    மனமிகு மல்லிகை மனத்தை
    கைபொத்தி அடைப்போரில்லை
    ஆழ்கடலில் அலையும் மீனின் கண்ணீரை
    கரைதனில் நின்று கண்டோர் உண்டோ ?
    காம இச்சையில் கரம்தொடும்
    பரத்தை உள்ளத்தை
    இரவில் இரக்கத்தோடு பார்த்தோர் உண்டோ ?
    இரவு பகல் பாராது ஓயாது உழைத்து
    உயர கட்டிய தேன்வீட்டை
    தீண்டிப்பார் .................
    பெண்தேனியின் போர்குணம் உமக்கு புரியும் .
    தடையின்றி ஈழ வையகம் தந்தோன்
    உரிமையை ,உணர்வை
    தடைச்செயல் தரணி ஏற்குமோ ?
    தாயகம்! தாயகமென மார்தட்டிய
    மாசற்ற மங்கையர் மார்பகங்கள்
    சிங்கள மாக்களே உனக்கு மாங்கனிகளா?
    தாய்ப்பால் அருந்தா
    தரமற்ற உனக்கு தாய்மைக் குணம்
    அறியாது போலும் .
    கருவுற்ற பெண்டிரை கருக்களைத்து
    உயிர்குடித்தாய் ......
    இளம்கன்னியரை காமத்தீயில் சுட்டெரித்தாய் .
    ஏழை தமிழ்க்குடியில் நெருப்பிட்டு
    எமது அன்னையர் அலர்குரல் கேட்டு
    ஆனந்த கூச்சலிட்டாய் ..
    பள்ளிதனில் சென்று
    செந்தமிழை பயிலவிருக்கும்
    பச்சிளம் குழந்தைகளை பார்காணும்முன்
    பாதியிலே உயிர்பறித்த சிங்களனே !
    உமது ஆதிக்க வெறியாட்சி
    அடித்தளமில்லாது ஆட்டம்காணும் .
    அடிமை என்றும் அடிமையில்லை
    தமிழரின் அடிமையும் ,அச்சமும் வீழும் நாள்
    வீறு கொண்டு விடுதலை பெரும்
    வியத்தகு நாள் எந்நாளோ ?
    அன்றுதான் தமிழருக்கு உண்மை விடுதலை நாள் .
    ஈழத் தமிழருக்கு பொன்னாள்.







    இளையகவி

    பதிலளிநீக்கு