வெள்ளி, 12 அக்டோபர், 2012

தோழியாய் வரபோகும் மனைவி


நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய் ஒரு ஆசை உண்டு...........
இது கவிதை அல்ல........
நான் கனவுகளால் கோர்த்த மாலை,
...என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா
...கொட்டும் மழையில் ஒரே குடையில் உன் தோள்
உரசி நடக்கஆசை............
உன் சுட்டு விரல் பிடித்து.........
உன் பாதம் தொடர ஆசை
உன் கால்நகம் வெட்டி விட
கையில் மருதானி வைத்து விட ஆசை...........
உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி அதை நீ வாசிக்க
நான் கேக்க ஆசை...........
உன் கைகுட்டை திருட ஆசை அதை என் கைபைல்
எப்போதும் வைத்திருக்க ஆசை....... உனக்காக காத்ருக்க ஆசை.......
கால தாமதமாய் வரும். நீ என் மன்னிப்புக்கு கை கட்டி நீக்க ஆசை.......
நீ சொல்லும் சின்ன சின்ன பொய்கள் எப்போதும் கேக்க ஆசை...........
நமக்குள் சின்ன சின்னதாய் வரும் சண்டைகள் ஆசை...........
அந்த சண்டைக்குள் பின் வரும் சமதபொனம் ஆசையோ ஆசை...........
உன் விரல் மல்லிகை பூ தலை சூட ஆசை...........

உன் விழி சொல்லும் கவிதை வாசித்து பார்க்க ஆசை...........
மலை பாம்பாய் நின்கிற தார் சாலையில் உன்னோடு
ஒரு மிதிவண்டி பயணம் போக ஆசை...........
நீ குடித்த பாதி தேனீர் ருசி பார்க்க ஆசை........
பவுர்ணமி இரவில் மொட்டை மாடியில் உன்னோடு நிலா சோறு உண்ண ஆசை........
சின்னஞ்சிறுகதைகள் பேசி உன் மடியில் குழந்தைபோல துயில ஆசை........
வாழ்கின்றன காலம் எல்லாம் உன்னோடு வாழ ஆசை........
சாகின்ற பொது நான் மட்டும் சாக ஆசை
இதெல்லாம் நடக்குமா !!!!!!!!!!!!!!!!!!!!!!

1 கருத்து:

  1. இலக்கணக் காதல்


    தோட்டத்தில் மலர்ந்த
    மலர்களில் செங்காந்தள் -நீ
    கண்களில் வார்த்த காதல்
    கைப்படா கானல் நீராய் .............
    உமது இதழ் பேசும் வார்த்தைகள்
    பொருளில்லா இரட்டைக் கிளவியாய்
    காதலின் அறிகுறிகள் அடுக்குத்தொடராய்
    எமக்கு அணி சேர்த்தாலும்
    அனுமதி மறுத்த வார்த்தைகள்
    உள்ளத்தினுள் வாட்டம்
    ஒருபொருள்பன்மொழியாய்
    எமது காதலை
    எத்தனை முறை இசைத்தாலும்
    ஒன்றோழிப்பொதுச் சொல்லாயாய்
    காதலை மறைத்து
    நட்பென்னும் நங்கூரமிட்டாய்
    போர்வன்முறை கொண்ட புறத்திணை வேண்டாம்
    அன்பை நாடும் ,அகிம்சை பேணும்
    அகத்திணை போதும்
    குறிப்புச்சொல்லால் உள்ளதை குத்தாதே
    இனகுறிச்சொல்லைக் கையாண்டு
    காதல் இசைவு மறுக்காதே
    வெளிப்படைச்சொல்லால்
    எமது காதலை வெளிச்சமாக்கு
    பெருந்திணை என்றெண்ணி
    கைக்கிளையாய் தனிமை படுத்தி விடாதே
    என்னுடையக்காதலை ................




    இளையகவி

    பதிலளிநீக்கு