வெள்ளி, 12 அக்டோபர், 2012

கோலப்பொடி


அதிகாலையில் தண்ணீர்
தெளித்து துப்புறபடுத்தி விட்டு
என்னை வைத்து
புள்ளிகள் இட்டாய்!
புள்ளிகள் அனைத்தும்
இணைத்து விட்டாய் !
வித விதமாய் கோலங்கள் போட்டு
மலர்கள் வரி துவினாய் !'
சூரியன் மறையும் தருணத்தில்
என்னை துடைப்பத்தால்
துடைத்து விட்டாயே

1 கருத்து:

  1. கண்ணே (அபி )



    உறவுக்கு அர்த்தம் தந்த புதுவரவே
    சோலையில் பூத்த புதுமலரே
    தந்தையெனும் பதக்கத்தை
    மணிமுடியாய் எமக்களித்த
    மனம் வீசும் மல்லிகையே ...
    நெஞ்சத்தில் வஞ்சகமில்லா இன்பச்சிரிப்பே
    மாசில்லா மாணிக்கமே ....
    குறும்பில் குவித்து வைத்த இரத்தினமே ....
    பாசத்தில் பதுக்கி வைத்த பவளமே ....
    உள்ளத்துள் பூரணமாய் நிறைந்த கோமேதகமே ....
    வையத்தில் வளம்பெற்று
    வாழ்விருக்கும் வைடூரியமே....
    மழலை மொழிபேசும் மரகதமே....
    தளர் நடையில் தரணியாளும் புட்பராகமே ...
    குலம் செழிக்க இறையளித்த அருட்கொடையே ....
    இன்பத்தில் யாம்பெற்ற பெரும் பேரே .....
    இணையில்லா இன்பத்தின் ஊற்றே
    எமது நாமத்தை கூறவந்த குறைவில்லா முத்தே
    முக்கனிகள் பிசைந்தளித்த இன்பச்சாரே
    முத்தமிழின் இசைபொருந்திய
    இன்பக் களஞ்சியமே
    உள்ளத்துள் இரண்டுற கலந்த எனதுயிரே ..........



    (எனது மகன் அபிச்செல்லம்)



    இளையகவி

    பதிலளிநீக்கு