வெள்ளி, 12 அக்டோபர், 2012

கோலப்பொடி


அதிகாலையில் தண்ணீர்
தெளித்து துப்புறபடுத்தி விட்டு
என்னை வைத்து
புள்ளிகள் இட்டாய்!
புள்ளிகள் அனைத்தும்
இணைத்து விட்டாய் !
வித விதமாய் கோலங்கள் போட்டு
மலர்கள் வரி துவினாய் !'
சூரியன் மறையும் தருணத்தில்
என்னை துடைப்பத்தால்
துடைத்து விட்டாயே

தலைவலி


உன் ''தைல விரல்களுக்காக''
என் தலைவலி தவிக்கின்றது...

காதல் காயங்கள்


காதல் காயங்கள்
உங்கள் உயிர்
உங்களை விட்டு பிரிவதை
நீங்கள் நேரில்
பார்த்திருக்கிறீர்களா ?
காதலித்து பிரிந்து பாருங்கள்
தெரியும்,
அந்த அனுபவம்
உங்களுக்கு வேண்டாம்,
அது மிகவும் கொடுமையானது.

வெட்கம்


நீ வெட்கம் மறக்கிற
சிலபொழுதுகளை நினைத்து
பிறகு வெட்கப்படுவாயே!
வார்த்தைகளுக்குள் வசப்படாத
அழகிய கவிதை அது!

தோழியாய் வரபோகும் மனைவி


நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய் ஒரு ஆசை உண்டு...........
இது கவிதை அல்ல........
நான் கனவுகளால் கோர்த்த மாலை,
...என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா
...கொட்டும் மழையில் ஒரே குடையில் உன் தோள்
உரசி நடக்கஆசை............
உன் சுட்டு விரல் பிடித்து.........
உன் பாதம் தொடர ஆசை
உன் கால்நகம் வெட்டி விட
கையில் மருதானி வைத்து விட ஆசை...........
உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி அதை நீ வாசிக்க
நான் கேக்க ஆசை...........
உன் கைகுட்டை திருட ஆசை அதை என் கைபைல்
எப்போதும் வைத்திருக்க ஆசை....... உனக்காக காத்ருக்க ஆசை.......
கால தாமதமாய் வரும். நீ என் மன்னிப்புக்கு கை கட்டி நீக்க ஆசை.......
நீ சொல்லும் சின்ன சின்ன பொய்கள் எப்போதும் கேக்க ஆசை...........
நமக்குள் சின்ன சின்னதாய் வரும் சண்டைகள் ஆசை...........
அந்த சண்டைக்குள் பின் வரும் சமதபொனம் ஆசையோ ஆசை...........
உன் விரல் மல்லிகை பூ தலை சூட ஆசை...........

உன்னைக் காதலிக்கவே


உன்னை விட்டுவிட்டு
வேறு யாரையேனும் காதலிக்கத்துவங்கிவிடுவேனோ
என்கிற பயமெல்லாம் உனக்கு வேண்டாம்!
உன்னைக் காதலிக்கவே இந்த ஆயுள் போதாது
என்று நினைக்கிறவன் நான்!
                                                                        smdsafa.net